மூவர் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் காவலர்கள் மனு அளித்துள்ளனர்.
சென்னையில் உள்ள சவுகார்பேட்டை விநாயகர் மேஸ்திரி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தலில்சந்த், புஷ்பா மற்றும் ஷீத்தல் ஆகிய 3 பேரை கடந்த புதன்கிழமை மர்ம கும்பல் துப்பாக்கியால் தாக்கிவிட்டு தப்பி சென்றது. இந்த சம்பவத்தில் மூன்று பேருமே சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலில்சந்தின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில் யானைகவுனி போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் கொலையாளி பயன்படுத்திய காரின் எண்ணை வைத்து குற்றவாளிகளை போலீசர் கண்டுபிடித்துள்ளனர்.
குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் தான் இந்த கொலை சம்பவம் அரங்கேற காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். தற்பொழுது போலீசார் புனேவில் பதுங்கியிருந்த கைலாஷ், விஜய் உத்தம் ரவீந்திரநாத்கர் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இந்த மூன்று பேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போலீசார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…