விருதுநகர்:பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின்கீழ் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து,முன்ஜாமீன் கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால்,அவரை கைது செய்யும் முயற்சியில் 3 தனிப்படைகள் அமைத்து நேற்று திருச்சி,விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில்,அதன் எண்ணிக்கை தற்போது 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் எஸ்.பி.மனோகரன் தகவல் அளித்துள்ளார்.
இதற்கிடையில்,அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார் (38), ரமணன் (34) மற்றும் கார் ஓட்டுநர் ராஜ் குமார் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மாஸ்கோ : அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மேற்பட்ட மாகாணங்களில் வெற்றி பெற்று…
சென்னை : திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை கலைஞர் பெயரால் அமைப்பதற்கான பணிகள் இன்று…
வாஷிங்டன் : அமெரிக்காவில் 47-வது அதிபர் தேர்தலானது நிறைவடைந்து, 2-வது முறையாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வாகி…
டர்பன் : இந்திய அணி, தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த டி20 தொடரில் 4…
ஒட்டாவா : கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த தூதரக சேவை முகாம்களுக்கு, கனடா பாதுகாப்பு அதிகாரிகள் அதாவது அந்நாட்டு…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…