நாகராஜன் “பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி”என்ற தடகள பயிற்சி மையத்தை சென்னை, பாரிமுனை, பிராட்வேயில் பச்சையப்பன் பள்ளி வளாகத்தில் வைத்து நடத்தி வந்தார்.
பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், காவல்துறை தன்னை கைது செய்ய வருவார்கள் என்று பயந்து நாகராஜன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
பின் ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக நாகராஜன் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, சிகிச்சை முடிந்த நிலையில் மே 29-ஆம் தேதி காவல்துறை நாகராஜனை கைது செய்து செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தடகளப் பயிற்சியாளர் நாகராஜனுக்கு ஜூன் 11-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையில், நேற்று முன்தினம் நாகராஜனை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் மூன்று விளையாட்டு வீராங்கனைகள் புகார் கொடுத்துள்ளனர். தடகள பயிற்சி நாகராஜன் விளையாட்டு பயிற்சியின் போது பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…