தமிழக அமைச்சர்கள் மூவர் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் இப்போது அமெரிக்காவில் உள்ளார். அவரோடு சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கரும் சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்களும் வெளிநாடு பயணம் மேற்கொண்டனர்.சிலர் பயணத்தை முடித்துவிட்டு திரும்பி விட்டனர்.
இந்தநிலையில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகிய இருவரும் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளனர்.
சமீபத்தில் அமைச்சர் சண்முகத்தின் அண்ணன் மகன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரை பார்ப்பதற்காக சொந்த பயணமாக அமைச்சர்கள் இருவரும் சென்றுள்ளார்கள்.மேலும் எகிப்து நாட்டுக்கு அமைச்சர் பாண்டியராஜன் சென்றுள்ளார். இவர் தனிப்பட்ட பயணமாக குடும்பத்துடன் சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை : இன்று ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழ்…
ஜெய்ப்பூர் : நேற்றைய 2 ஐபிஎல் போட்டிகளில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்…
சென்னை : கடந்த வாரம் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில்…
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாட்டில்…
சென்னை : இன்று அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை சமத்துவ நாளாக தமிழக அரசு அறிவித்து…
சென்னை : இந்த வருட ஐபிஎல் தொடரில் அதளபாதாளத்தில் இருந்த அணிகள் தற்போது கம்பேக் வெற்றியை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டன.…