தமிழகத்தில் மூன்று நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்.!
- அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- நாளை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் , நாளை மறுநாள் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வந்தது.
இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .
நாளை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை மறுநாள் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.