தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பரவாமல் இருக்க சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில், இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகிறது.
அந்த வகையில்,டிசம்பர் 15 முதல் வணிகரீதியான சர்வதேச பயணிகள் சேவைகளை மீண்டும் தொடங்குவதாக தெரிவித்த நிலையில்,டிசம்பர் 15 முதல் சர்வதேச விமான சேவையை தொடங்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்தது.
இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக,சென்னை விமான நிலையத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,தென் ஆப்பிரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட ஒமைக்ரான் பரவிய 38 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.அதன்படி,ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்த விமான நிலையத்திலேயே தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும்,இவர்களின் உடல்நிலையை அறிந்துகொள்ள,குறைந்த நேரத்தில் முடிவு கிடைக்கக்கூடிய ரேபிட் பரிசோதனை கட்டணம் ரூ.4000 லிருந்து ரூ.3400 ஆக குறைக்கப்பட்டுள்ளது.அதேபோல,ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைக்ககான கட்டணமும் ரூ.900 லிருந்து ரூ.700 ஆக குறைக்கப்பட்டுள்ளது.ஆனால்,இதன் முடிவு கிடைக்க 6 மணி நேரம் ஆவதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…