அச்சுறுத்திய சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது..!
திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
திருப்பூரில் 7 பேரை தாக்கி போக்கு காட்டி வந்த சிறுத்தைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர். திருப்பூர் நகரப்பகுதியில் புகுந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. முட்புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு முதல் மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தியுள்ளனர்.
கடந்த 4 நாட்களாக சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தியத்திலிருந்து அரை மணி நேரம் வரை ஆகும் என தகவல் சிறுத்தை மயக்கமடைய மருத்தின் வீரியத்தை பொறுத்து கூடுதல் நேரம் எடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.