#BREAKING : ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ கு.க.செல்வம் தற்காலிகமாக நீக்கம்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திமுகவின் ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ கு.க. செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது.இதனிடையே டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார் திமுகவை சேர்ந்த கு.க. செல்வம்.இதன் பின்னர் எம்எல்ஏ கு.க. செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், என்னுடைய தொகுதி விவகாரங்களை குறித்து தான் ஜே.பி.நட்டா அவர்களை சந்தித்தேன். திமுகவில் உட்கட்சி தேர்தலை ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும். தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை மு..க. ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். நான் – பிஜேபியில் இணையவில்லை.தொகுதி மேம்பாட்டுக்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்திக்க வந்தேன். நட்டாவை சந்தித்தத்தற்காக என்மீது நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும்.நல்லாட்சி வழங்கி வரும் நரேந்திர மோடி தலைமையிலான அரசை விமர்சனம் செய்யும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் உறவை மு.க.ஸ்டாலின் முறித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் ,கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதுடன் ,மேலும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.