சொந்தப் பிள்ளைகளைப் போல வளர்த்தவர்கள் தனக்கு எதிராக துரோகம் செய்து விட்டனர் என சீமான் கூறினார்.
சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக கல்யாணசுந்தரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இவரை தொடர்ந்து அக்கட்சியின் மற்றொரு முக்கிய பொறுப்பாளராக இருந்த வழக்கறிஞர் ராஜிவ்காந்தியும் கட்சியில் இருந்து விலகியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் அடுத்தடுத்து இரண்டு முக்கிய நபர்கள் விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து சில நிர்வாகிகள் விலகிய நிலையில், இது குறித்து பேசிய சீமான், கட்சிக்குள்ளே தனக்கு எதிராக வேலை செய்ததாகவும், தாங்கள் தான் தலைவராக வரவேண்டும் என்று நினைத்து வேலை செய்தவர்கள் அவர்கள் என சீமான் கூறினார்.
சமூக வலைத்தள பக்கங்களில் தனக்கு எதிராக எழுத வைத்தவர்கள் என்றும், தனது இறப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் எனவும் அவர் கூறினார். சொந்தப் பிள்ளைகளைப் போல வளர்த்தவர்கள் தனக்கு எதிராக துரோகம் செய்து விட்டனர் எனவும், தான் இறந்த பிறகுதான் கட்சியை உடைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…