மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது – கமல்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம்.
சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் தமிழக அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டியிருந்தது. அதுவும், முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதி நிலை 6 மாதங்களுக்கும் மட்டும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தன. பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தாக்களை சிலர் விமர்சித்தும் சிலர் வரவேற்றும் வருகின்றன.
அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) August 13, 2021