அரசு வேலையில் சேர விரும்புவோர் 10-வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் குறைந்தது 40%மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
சென்னை அண்ணா மேலாண்மை நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்ற அரசாணை குறித்து அமைச்சர் விளக்கம் கொடுத்தார். அதில், அரசு வேலையில் சேர விரும்புவோர் 10-வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் குறைந்தது 40%மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
80-க்கும் மேற்பட்ட தேர்வுகளை பணியாளர் தேர்வாணையம் நடத்துவதால் அதன் எண்ணிக்கையை குறைக்க பரிசீலனை. நிபுணர்களுடன் ஆலோசித்து தேர்வு முறையில் மாற்றம் செய்ய முடிவு. நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் சிறப்பான கல்வி திட்டம் உள்ளது. கிராமப்புற அரசுப்பள்ளிகளில் படித்துவரும் மாணவர்களுக்கு அரசு வேலையில் வாய்ப்பு அதிகரிக்கும். அரசு பணி என்பது மிகவும் முக்கியம். அரசியல் தலைவர் பதவி என்பது நிரந்தரம் இல்லை.
தேர்தல் நடந்தால் பதவி மாறும் ஆனால் அரசு வேலை அப்படி இல்லை. 8 கோடி மக்கள் உள்ள இடத்தில் 9 லட்சம் பேர் மட்டுமே அரசு பணியில் உள்ளனர். தமிழ்நாட்டில் அரசுப் பணியில் அமரக்கூடிய அனைவரும் தமிழ் புலமையுடன் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் பாடம் கட்டாயம் இடம் பெறும்.
தொலைநோக்கு பார்வையுடன் முதலமைச்சரால் செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மின்வாரியம் உள்ளிட்ட சில துறைகளில் தமிழ் தெரியாதவர்கள் பணியமர்த்தப்பட்டனர். அந்த தவறுகளை சரிசெய்யும் வகையிலே தற்போது அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…