முஸ்லீம்களை மிரட்டி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்.! – எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா வலியுறுத்தல்.!
முஸ்லிம்களை மிரட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களையும், இதற்கு மூளையாக செயல்பட்டவர்களையும் உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும். – எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா.
தேனிமாவட்டத்தில் இஸ்லாமியர்களின் மத வழிபாடான தொழுகைக்குச் சென்று வந்த முஸ்லிம் மாணவர்களை தடுத்து நிறுத்தி, தொழுகைக்கு சென்ற இஸ்லாமிய மாணவர்கள் யாரும் பள்ளிக்கூடத்திற்குள் செல்லக்கூடாது என்று இந்து முன்னணியினர் மிரட்டியதாகவும்,
அதே போல, சென்னை பகுதில், அரபி பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 8ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவனின் தொப்பியை தரக்குறைவாக பேசியதாகவும் குற்றசாட்டுகள் எழுந்தன.
இந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக தலைவரும், பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜவாஹருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமாக குறிப்பிட்டுள்ளது என்னவென்றால்,’ சிறுபான்மையின முஸ்லிம்களை மிரட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களையும், இதற்கு மூளையாக செயல்பட்டவர்களையும் உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும்.’ என அதில் வலியுறுத்தியுள்ளார் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா.