இடைதேர்த்லில் காணாமல் போக வேண்டியவர்கள் காணாமல் போவார்கள் – ஆசிரியர் கீ.வீரமணி
ஈரோடு இடைத்தேர்தலில் காணாமல் போக வேண்டியவர்கள் காணாமல் போவார்கள் என ஆசிரியர் கீ.வீரமணி பேட்டி.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திராவிட மாடல் கொள்கை ஆட்சியே தவிர, அது வெறும் பதவிக்கான ஆட்சி அல்ல என முதல்வரின் பிறந்தநாள் செய்தி உணர்த்தியுள்ளது.
ஈரோடு தான் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும் இடம்
மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திராவிட மாடலை எதிர்ப்பவர்கள் மறு சிந்தனை செய்யும் அளவுக்கு ஈரோடு வாக்காளர் பெருமக்கள் வாக்களித்துள்ளனர். எப்போதுமே ஈரோடு தான் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும் இடமாக இருக்கும்.
ஈரோடு இடைத்தேர்தலில் காணாமல் போக வேண்டியவர்கள் காணாமல் போவார்கள். கண்டுகொள்ளப் பட வேண்டியவர்கள் அடையாளம் காட்டப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.