ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

Students Union

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்வதற்காகத் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று அங்கு சென்றுள்ளார். இந்த சூழலில், முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்காமல் ஆளுநர் ரவி, இன்று துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசுவதாக கூறி பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி, சேலத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள ஜெகநாதனை ஆளுநர் சந்தித்து ஆலோசனை நடத்துவதற்கு மாணவர் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செந்தில்பாலாஜிக்கு நீதிமன்ற காவல் 15-வது முறையாக நீட்டிப்பு..!

இதில், திமுக, திராவிடர் கழகம், மதிமுக மாணவரணி, மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் உள்ளிட்டோர் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிராக சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலை. முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவரணி மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் உள்ளிட்டவர்களை காவல்துறை கைது செய்தனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆளுநரே திரும்பி போ, திரும்பி போ என முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடு புகாரில் சிக்கியவர்களை ஆளுநர் சந்தித்து பேசுவதற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த நிலையில், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்