மனித உயிர்களோடு விளையாடும் இவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – டிடிவி
போலி மருத்துவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க முழுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட்.
தமிழக காவல்துறை நடத்திய சோதனையில், 70க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
டிடிவி தினகரன் ட்வீட்
அந்த ட்வீட்டர் பதிவில், ‘சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி உரிய பதிவு இன்றி மருத்துவம் அளிப்போர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குகள் பதிவு செய்து 70க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்களை கைது செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுகின்றோம் என்று பெயரளவில் நடவடிக்கை எடுக்காமல் உண்மையான அக்கறையோடு போலி மருத்துவர்களை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
கஞ்சா ஒழிப்பு என்ற பெயரில் இரண்டு ஆபரேஷன்களை போலீசார் மேற்கொண்ட போதும் இன்னும் கூட கஞ்சா விற்பனையும், அதனால் ஏற்படும் வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.
எனவே இனி பெயரளவுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளாக இல்லாமல், மனித உயிர்களோடு விளையாடும் போலி மருத்துவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க முழுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
எனவே இனி பெயரளவுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளாக இல்லாமல், மனித உயிர்களோடு விளையாடும் போலி மருத்துவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க முழுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். (4/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 12, 2023