தமிழை பெருமைப்படுத்தியவர்கள் பிரிட்டிஷ்காரர்களே – உயர்நீதிமன்றம் மதுரை கிளை

Default Image

தமிழ் மொழி கல்வெட்டு விவரம் குறைவாக குறிப்பிடுவதுபோல் உள்ளது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் சந்தேகம்.

தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர்கள் காமராஜ், புஷ்பவனம், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 86,000 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டதில் 27,000 தமிழ், 25,756 சமஸ்கிருதம், 9,400 கன்னடம், 7,300 தெலுங்கு மொழிக்கானவை என டெல்லியில் காணொளி வாயிலாக ஆஜரான தொல்லியல்துறை தரப்பில் தெரிவித்தனர்.

இதையடுத்து, அதிக கல்வெட்டுகளை கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை என்றும் அதிக கல்வெட்டுகளை கொண்ட தமிழ், திராவிட மொழியாக கருதப்படும்போது, சம்ஸ்கிருதத்தை இந்தோ-ஆரிய மொழியாகத்தானே கருத வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், தமிழ் கல்வெட்டுகளை கண்டறிந்து தமிழை பெருமைப்படுத்தியவர்கள் பிரிட்டிஷ்காரர்களே என தெரிவித்து, தொல்லியல் துறை தரவுகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் மொழி கல்வெட்டு விவரம் குறைவாக குறிப்பிடுவதுபோல் உள்ளது. மொழிகளுக்கு இடையே வேறுபாடு காட்டப்படுவதை ஏற்க இயலாது. அனைத்து மொழியையும் மதிக்கிறோம். ஆனால், ஒவ்வொரு மொழியின் சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டியவை என கருத்து கூறினர்.

மொழிவாரியாக கல்வெட்டுகளின் எண்ணிக்கை, நிபுணர்களின் எண்ணிக்கை, காலி பணியிடங்கள் விவரங்கள், அவற்றை நிரப்புவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தொல்லியியல் துறை தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை மதுரை கிளை தள்ளிவைத்து என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest