திமுகவுடன் சேர்ந்து தமிழ் இனத்தையே கொன்றவர்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Published by
Castro Murugan

தமிழ் இனத்தையே கொன்றுவிட்டு, இன்றைக்கு தமிழன் என்று பேசினால் நம்பவே மாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.

டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ஆம் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. பிப்.1-ஆம் தேதி 2022-23 ஆண்டுக்கான நிதிகளை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து,  குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினர் ராகுல் காந்தி, மாநில கூட்டாட்சி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? ஒவ்வொரு மாநிலத்தோடு பேசுவது, பிரச்சனைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது.

இந்தியாவில் இரண்டு விதமான பார்வை உண்டு. அதில் ஒன்றுதான் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்ற பார்வை. கூட்டாட்சி என்பது அதன் அர்த்தம். தமிழ்நாட்டில் உள்ள என் சகோதரரிடம் நான் சென்று உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்பேன். அவர் அவரது தேவையை என்னிடம் சொல்வார். அதேபோல எனக்கு தேவையானதை கேட்டுப் பெறுவேன், இதுதான் கூட்டாட்சி. இந்தியா என்பது ராஜாங்கம் கிடையாது. பல மாநிலங்களால் இணைந்த ஒன்றியம் என தெரிவித்தார்.

பாஜகவால் தங்களுடைய வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களையும், தமிழகத்தையும் ஆள முடியாது என ஆவேசமாக தெரிவித்த ராகுல்காந்தி, அனைத்து மாநிலங்களையும் ஆள நினைத்தால், அந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றும் கூறினார். தமிழ்நாடு மனம் தளராமல் மீண்டும் மீண்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு கோரிக்கை வைக்கிறது. ஆனால் மத்திய அரசு அதை மறுத்து விரட்டி அடிக்கிறது. அனைத்து மாநில மக்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் ஆகியவை தனித்துவம் வாய்ந்தவை, அவற்றுக்கு மத்திய அரசு மதிப்பு அளித்து சம உரிமை வழங்க வேண்டும் என்றும் இந்தியா இரண்டாக பிரிந்து உள்ளது. ஒரு இந்தியா பணம் படைத்தவர்களுக்காகவும், மற்றொரு இந்தியா பணம் இல்லாத ஏழைகளுக்கானதாகவும் உள்ளது எனவும் குறிப்பிட்டார். மேலும், தனது உரையை முடித்து நாடாளுமன்ற வளாகத்தைவிட்டு வெளியேவரும் போது, தமிழகத்தை குறிப்பிட்டு அதிகமுறை பேசியது ஏன் என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,  ‘நான் ஒரு தமிழன்’ என்று பதில் அளித்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதன்பின்னர் செய்தியாளராகலிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராகுல்காந்தி தமிழர் என்று சொல்வதற்கே முகாந்திரம் இல்லை. ஒட்டுமொத்தமாக திமுகவுடன் சேர்ந்து தமிழ் இனத்தையே கொன்றவர்கள். இதை வரலாறே மன்னிக்காது. ஒன்றரை லட்சம் தமிழர்களின் ஆன்ம மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ் இனத்தையே கொன்றுவிட்டு, இன்றைக்கு தமிழன் தமிழன் என்று பேசினால் தமிழன் நம்பவே மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

Published by
Castro Murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago