பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருந்தவர் பி.டி.செல்வகுமார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய காரணத்தால் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க பாஜக தடை விதித்தது.இதனை தொடர்ந்து செல்வகுமார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,புதுக்கோட்டை திருமண விழாவில் யதார்த்த உண்மையைத்தான் வெளிப்படுத்தினேன், இதனால் சிலர் என்னை அருவெறுக்கத்தக்க வகையில் பேசினர்,உண்மையை பேசியதற்காக கடந்து சில தினங்களாக காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் என்னை பேசினர் .என்னை காயப்படுத்தினர்.என்னுடைய நலம் விரும்பிகள் இனி இங்கு இருக்க வேண்டாம்,நீங்கள் இணையவேண்டிய இடத்தில் நகர காலம் வந்துவிட்டது எனக்கூறி அழைத்ததன் அடிப்படையில் என்னை திமுகவில் இணைத்துக்கொண்டேன்
தமிழக பா.ஜ.க வில் இருந்து என்னை வெளியேற்ற நினைத்தவர்கள் தற்பொழுது மகிழ்ச்சியாக இருப்பார்கள்.ஆனால் அது நிரந்தரமல்ல.என்னை திமுக வில் தொண்டனாக இணைத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…