இதுவரை நிவாரணம் பெறாதவர்கள் அந்தந்த ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் – அமைச்சர் காமராஜ்

இதுவரை நிவாரணம் பெறாதவர்கள் அந்தந்த ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு மக்களுக்கு உதவும் வகையில், ரேஷன் கடைகளில் இலவசமாக பொருட்கள் வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், இந்த பொருட்கள் பலருக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பேட்டியளித்த அமைச்சர் காமராஜ், ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் மற்றும் ரூ.1,000 பெறாதவர்கள் அந்தந்த பகுதியில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025