அதிமுக – பாஜக கூட்டணியின் நோக்கம் வேலை வாய்ப்பு, முன்னேற்றம், பெண்களுக்கு பாதுகாப்பு போன்றவைதான் என உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தமிழகத்தில் இருந்து ரூ.120 கோடி நிதி வந்துள்ளது. தமிழக மக்கள் ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்றும் அவரின் பார்வை முழுவதும் தமிழத்திலேயே உள்ளது எனவும் கூறியுள்ளார். பாஜக கூட்டணியை வெற்றி பெற செய்தால் தமிழகத்துக்கு அதிக அளவில் மத்திய அரசின் நிநிதியும், திட்டங்களும் கிடைக்கும். கோவைக்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. வானதி சீனிவாசன் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவையும் இடம் பெற்றுள்ளது என்றும் தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழகத்திற்கு 54 லட்சம் கழிப்பறைகளை மத்திய அரசு கட்டி கொடுத்துள்ளது என கூறிய அவர், தமிழகத்தில் ராணுவ வழித்தடம் அமைத்து முடிக்கும்போது ஏராளமான வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் கூறியுள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணியின் நோக்கம் வேலை வாய்ப்பு, முன்னேற்றம், பெண்களுக்கு பாதுகாப்பு போன்றவைதான். ஆனால், இங்குள்ள எதிர் அணியான திமுக – காங்கிரஸ் கூட்டணி பெண்களையும், தாய் மார்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றன. பெண்களை மதிக்க தெரியாதவர்களுக்கு ஆட்சிக்கு வர தகுதியற்றவர்கள் என விமர்சித்துள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…