சீட்டு கிடைக்காதவர்கள் பிடிவாதம் பிடிக்க கூடாது – மு.க.ஸ்டாலின்
விருப்பமனு கொடுத்தவர்கள் அத்தனை போரையும் வேட்பாளர்களாக அறிவிக்க ஆசைதான். ஆசைகள் கடல்போல இருந்தாலும், தொகுதிகளின் எண்ணிக்கை கையளவு தானே.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் காட்சிகள் அனைத்தும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் இடம் பெறாத வேட்பாளர்களுக்கு ஸ்டாலின் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி, சீட்டு கிடைக்காதவர்கள் பிடிவாதம் பிடிக்க கூடாது. பிடிவாதம் பிடித்தால், நெருக்கடி ஏற்படுத்தினால் அவர்கள் உடன்பிறப்புகள் என்ற தகுதியை இழந்து விடுவார்கள். பிடிவாதம் பிடிப்போரின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கேள்விக்குள்ளாகி விடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விருப்பமனு கொடுத்தவர்கள் அத்தனை போரையும் வேட்பாளர்களாக அறிவிக்க ஆசைதான் . ஆசைகள் கடல்போல இருந்தாலும், தொகுதிகளின் எண்ணிக்கை கையளவு தானே. திமுக என்ற பெட்டகத்தில் உள்ள உடைகள் அனைத்தும் உயர்ந்தவை, தரமானவை, எழில் கூட்டுபவை. அதில் 173 உடைகளை மட்டுமே இந்த சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தியுள்ளேன். இன்னும் ஏராளமான, தரமான, பயந்தாராத்தாக்க உடைகள் நேர்காணலில் என்னை அலங்கரித்துள்ளன. இன்னும் பல களங்கள், வாய்ப்புகள் உள்ளதால் உரிய முறையில் அப்போது பயன்படுத்திக் கொள்வேன் என தெரிவித்துள்ளார்.