அதிமுகவை விமர்சிப்பவர்கள் தங்கள் நிலையை அறிந்து பேசுங்கள்.. செல்லூர் ராஜு காட்டம்.!

ADMK Former Minister Sellur Raju - Tamilnadu BJP President Annamalai

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணத்தின் போது, சில தினங்களுக்கு முன்னர் பேசும் போது, ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் கூட்டணியில் இருந்து ஒதுக்கவில்லை. என்று கருத்து தெரிவித்து இருந்தார். இது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்பை உருவாக்கியது.

இவரது பேச்சுக்கு அதிமுக முக்கிய தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர். அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அண்ணாமலை மாநில தலைவர் மட்டுமே, நாங்கள் கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைவர்களான ஜே.பி.நட்டா, அமித்ஷா, பிரதமர் மோடியிடம் மட்டுமே கலந்து ஆலோசிப்போம் என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய அண்ணாமலை, அரசியல் விஞ்ஞானி பற்றியெல்லாம் பேச வேண்டாம் என் தனது விமர்சனத்தை முன்வைத்தார்.

தற்போது அண்ணாமலை கருத்துக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், அதிமுகவை விமர்சிப்பவர்கள் தமிழக அரசியலில் தங்கள் நிலை என்ன என்பதை அறிந்து பேசினால் நன்றாக இருக்கும் எனவும், அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி. நான் படிப்படியாக உயர்ந்து இந்த இடத்திற்கு வந்துள்ள்ளேன் என குறிப்பிட்டு,

அண்ணாமலை கருத்தை பொறுப்படுத்த வேண்டியதில்லை. நாங்கள் கூட்டணி குறித்து தேசிய தலைவர்களிடம் தான் முடிவுகளை எடுப்போம். அதனால் அண்ணாமலை கருத்துக்கள் பற்றியெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை என செல்லூர் ராஜு தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin
smriti mandhana records