6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம் செய்வோர் மனித குலத்திற்கு ஓர் அவமான சின்னம். – சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்.
கடலூர் மாவட்டம் , விருத்தாச்சலம் நகராட்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அப்பள்ளியின் தாளாளர் ஓய்வுபெற்ற ஆசிரியர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திமுக கவுசிலராக இருந்தவர் என்பதால், திமுக கட்சியில் இருந்தும் அவர் நீக்கம் செய்யபட்டார்.
இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் :
விருத்தாச்சலம் 6 வயது சிறுமி பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டறிந்தார்.
பாலியல் புகார் :
இபிஎஸ்-இன் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டவுடன் அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டர்.
பக்கிரிசாமி கைது :
அங்கு அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் பின்னர், அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தனியார் பள்ளியின் தாளாளர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக நடவடிக்கை :
மேலும் அவர் கூறுகையில், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பக்கிரிசாமி விருத்தாச்சலம் நகராட்சி 30வது வார்டு திமுக உறுப்பினர் என தெரிந்தவுடன் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து முழுதாக நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது மேலும் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
மறைமுக விமர்சனம் :
இந்த செய்தியை நான் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன் என கூறவில்லை. சம்பவம் பற்றி அறிந்ததும் உடடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என அப்போதைய முதலவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.
முதல்வர் விளக்கம் :
இறுதியாக, பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம் செய்வோர் மனித குலத்திற்கு ஓர் அவமான சின்னம். அவர் மீது இந்த அரசு பாரபட்சமின்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.