உத்தரப்பிரதேச கோரக்பூர் ரயில் ஓட்டுநர் தேர்வாளர்கள் பட்டியல் திருப்பி அனுப்பப்பட்டதற்காக,இந்திய ரயில்வே நிர்வாகத்துக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட ஐம்பத்தி நான்கு விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணித்து இந்திய ரயில்வே உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று எம்பி சு.வெங்கடேசன் அவர்கள்,மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில்,உத்தரப்பிரதேச கோரக்பூர் ரயில் ஓட்டுநர் தேர்வாளர்கள் பட்டியல் திருப்பி அனுப்பப்பட்டதற்காக,இந்திய ரயில்வே நிர்வாகத்துக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
“மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தெற்கு ரயில்வேயில் ஐம்பத்தி ஒரு ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு வடகிழக்கு ரயில்வேயின் கோரக்பூர் தேர்வாணையத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேர் பட்டியலை தெற்கு ரயில்வே கேட்டு வாங்கியது. அந்த பட்டியல் 24.9.2021 அன்று தெற்கு ரயில்வேக்கு அனுப்பப்பட்டது.
இந்த செயல் எந்த வகையிலும் நியாயமானதல்ல, இது நிறுத்தப்பட வேண்டும் என்று 25.9.2021 அன்று ரயில்வே அமைச்சருக்கும் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் நான் கடிதம் எழுதினேன். தெற்கு ரயில்வே எனது கோரிக்கையை ஏற்று அந்த கோரக்பூர் தேர்வாளர் பட்டியலை 28-9-2021 அன்று திருப்பி அனுப்பியுள்ளது.
தெற்கு ரயில்வேயின் பொது மேலாளருக்கும் எனது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் 51 காலியிடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஆர்ஆர்பி சென்னை தேர்வானவர்களைத் தேர்வு செய்திட தெற்கு ரயில்வே பொது மேலாளரை கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே ஆர்ஆர்பி சென்னை இணையதளத்தில், அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் அதிகரிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு செய்யப்பட்ட அவர்களின் பட்டியல் 2022 வரை பணியமர்த்தலாம் என்றும் இணையதளத்தில் உள்ளது . எனவே தெற்கு ரயில்வே பொது மேலாளரை சென்னையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களையும் அந்த ஐம்பத்தொரு காலியிடங்களில் நிரப்பிட கோருகிறேன்.
தேவைப்பட்டால் ரயில்வே அமைச்சரை இதில் தலையிடவும் அதற்கு அனுமதி வழங்கவும் கோருகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…