பணியில் ஈடுபடுவோருக்கு வாக்குரிமை மறுக்கப்படக்கூடாது – உயர்நீதிமன்றம்
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்களிக்க போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பல்வேறு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அடுத்தடுத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு தேர்தல் குறித்த விழுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என பலவேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்களிக்க போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அடிப்படையான வாக்குரிமை மறுக்கப்படக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.