அதிமுகவிற்கு பின்னடைவு ! அதிமுக அம்மா பேரவை இணை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக தோப்பு வெங்கடாசலம் அறிவிப்பு
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிலையில் தோப்பு வெங்கடாசலம் அதிமுக அம்மா பேரவை இணை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தவர்.தற்போது பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார்.
இன்று தோப்பு வெங்கடாசலம் இது தொடர்பாக ,அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார்.தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாக கடிதத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.