10-ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்ப் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்ற தூத்துக்குடி மாணவி – கனிமொழி எம்.பி
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் முழு மதிப்பெண் எடுத்து சாதனைப் படைத்த மாணவி துர்காவுக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்.பி.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று, 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றனர் என அமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி துர்கா என்ற மாணவி முழு மதிப்பெண் பெற்றுள்ளார். இதுகுறித்து கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ’10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் முழு மதிப்பெண் எடுத்து சாதனைப் படைத்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி துர்கா அவர்களை, மகிழ்வோடு வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் முழு மதிப்பெண் எடுத்து சாதனைப் படைத்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி துர்கா அவர்களை, மகிழ்வோடு வாழ்த்துகிறேன். pic.twitter.com/Ge9Nv9zCZc
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 20, 2022