ஸ்டெர்லைட் ஆலை…….ஆபத்தான ரசாயனக்கழிவு…..விரைவில் அகற்றம் ஆட்சியர் சந்தீப்…!!!
ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மிகவும் ஆபத்தான ரசாயனக்கழிவுகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மிகவும் ஆபத்தான ரசாயனக்கழிவுகளை வெளியேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருந்த ரசாயனப் பொருள்களை அகற்றும் பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்து விட்டது.
மேலும் இன்னும் அகற்றப்படாமல் ஆலையில் வைத்திருக்கும் ரசாயனம் மற்றும் மூலப்பொருள்களால் தீ விபத்து போன்றவை நேரிடக்கூடும் என்பதால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் உதவி ஆட்சியர் தலைமையிலான குழு மீண்டும் ஆலையில் ஆய்வு நடத்த உள்ளதாக சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
DINASUVADU