அடாத மழையிலும் அயராது உழைக்கும் போக்குவரத்து காவலர் – தூத்துக்குடி எஸ்பி பாராட்டு.!
தூத்துக்குடியில் மழையை பொருட்படுத்தாமல் கடமையை செய்த போக்குவரத்து காவலரை அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் வெகுமதி வழங்கி பாராட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, இன்று காலை பரவலாக மழை பெய்தது.
தூத்துக்குடியில் நேற்று கொட்டி தீர்க்கும் மழையில் தம் பணியை அயராம மேற்கொண்டு வரும் தெற்கு போக்குவரத்து முதல்நிலை காவலர் திரு.முத்துராஜாவின் தற்போது இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று பெய்த கனமழையினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கொட்டும் மழையின் நடுவில் தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் கொட்டும் மழையில் தனது போக்குவரத்து பணியை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார்.
இதற்கிடையில், காவலரின் கடமையுணர்ச்சியை கண்ட பொதுமக்கள் இதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். இதனையடுத்து, போக்குவரத்து காவலரை அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் வெகுமதி வழங்கி பாராட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் பெய்துவரும் அடாது மழையிலும் விடாது பணி செய்து வரும் போக்குவரத்து காவலரின் கடமையுணர்வை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், அவர் பணி செய்து வரும் இடத்திற்கே நேரில் சென்று வெகுமதி வழங்கி பாராட்டினார். pic.twitter.com/ohxhrMpQEW
— Thoothukudi District Police (@TUTICORINPOLICE) November 16, 2020