போராட்ட அனுமதி பெற்றவர்கள் யார்….? தூத்துக்குடி SP நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…!!
தூத்துக்குடியில் போராட்டம் நடத்த அனுமதி கூறியவர்கள் விவரத்தை நேரில் ஆஜராகி தூத்துக்குடி S.P அளிக்க வேண்டுமென்று மதுரை நீதிமன்றம் கூறியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் குழு பரிந்துரை செய்ததையடுத்து தூத்துக்குடியில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.அதோடு இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பரிந்துரையை நிராகரிக்க முடியாது என்று சமீபத்தில் உத்தரவு வெளியிட்டது.இது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய்வழக்கு போடுவதை நிறுத்த கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது , கடந்த 3 மாதங்களில் போராட்டம் நடத்த அனுமதி கூறியவர்கள் எவ்வளவு பேர் என்று விவரங்களை மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி அளிக்க வேண்டுமென்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.