தூத்துக்குடி, சில்லாங்குளத்தில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு உறவினர்களில் கோரிக்கையை அடுத்து தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சில்லாங்குளம் எனும் ஊரில் செயல்பட்டு வரும் மேல்நிலை பள்ளியில் பயின்று வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, பள்ளி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .
மாணவி உயிரிழந்த வழக்கை பசுவந்தனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். இதற்கிடையில், மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், பள்ளி நிர்வாகத்தினர் சரியான தகவலை தெரிவிக்க வில்லை எனவும் , வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுமாறும் உறவினர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்தனர்.
இதனை தொடர்ந்து, தற்போது, இந்த வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு விசாரணையை முதலில் மாணவி பயின்ற பள்ளியில் இருந்து துவங்கியுள்ளனர்.
மாணவி பயின்ற பள்ளி, கழிவறை, பள்ளி விடுதி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் பெற்றோரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…
ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…