#BREAKING: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு..ரஜினிக்கு மீண்டும் சம்மன்..?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர்உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடிக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூற சென்றபோது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, போராட்டத்தில் சமூக விரோதிகள் போராட்டத்தில் உள்ளே புகுந்துள்ளனர். தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகி விட்டனர் என கூறினார்.
இந்நிலையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்திற்கு விரைவில் சம்மன் அனுப்பும் எனவும், ஜனவரி மாதம் விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆஜராகலாம் என ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.