தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 30-வது கட்ட விசாரணை நிறைவு..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக 30-வது கட்ட விசாரணை முடிவடைந்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 மே 22 ஆம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக கடந்த 13-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற விசாரணைக்காக 122 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 122 பேரில் 100 விசாரணை ஆணையம் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனால், 30-வது கட்ட விசாரணை முடிவடைந்துள்ளது. விசாரணை ஆணையத்தின் 31-ஆம் கட்ட விசாரணை அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி தொடங்க உள்ளது.
29 கட்ட விசாரணையில், 1,209 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 863 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.