தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா வரும் 26-ம் தேதி தொடக்கம்…!
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் 438-ஆம் ஆண்டு திருவிழா வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
தூத்துக்குடியில் பனிமயமாதா பேராலய திருவிழாவானது மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவதுண்டு. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் கூட இந்த விழாவில் கலந்து கொள்ள மக்கள் வருவதுண்டு.
இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, இந்த திருவிழா பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது. இந்நிலையில், தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து, தமிழகத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் 438-ஆம் ஆண்டு திருவிழா வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இந்த விழாவானது 10 நாட்கள் நடைபெறும்.