தொகுதி நிதியிலிருந்து ரூ.25 லட்சம் வழங்கிய தூத்துக்குடி எம்எல்ஏ

Default Image

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார்.

எனவே கொரோனா தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் தூத்துக்குடி  எம்பி கனிமொழி  முன்னிலையில்  எம்எல்ஏ  கீதாஜீவன் MLA அவர்கள் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு தனது தொகுதி நிதியிலிருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் வழங்கியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்