வாரம் இரு முறை …மக்களுக்கு ஹேப்பி தான் ..! தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் ரயில் சேவை இன்று தொடக்கம்.!

Tuticorin - Mettupalayam

ரயில் சேவை : தூத்துக்குடியில் இதற்கு முன்னர் இருந்து கோவைக்கும் மற்றும் பகல் நேரத்தில் சென்னைக்கும் இயக்கப்பட்டு வந்த இணைப்பு ரெயில்கள் கொரோனா காலத்தின் போது நிறுத்தப்பட்டது. அதன் பின் அந்த ரயில் சேவையானது தொடங்கவில்லை. இதனால் பல்வேறு நகரங்களுக்கு ரெயில் சேவை வழங்க வேண்டும் என்று ரெயில் பயணிகள், வர்த்தக சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனால், தூத்துக்குடியில் இருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வாரத்தில் 2 நாட்கள் செல்லும் புதிய ரெயில் இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் இந்த ரெயில் இயக்கப்படாமல் வந்ததால் ரயில்வே பயணிகள் மிகுந்த ஏமாற்றத்தை சந்தித்தனர்.

இதனால், இந்த ரயில் சேவையை விரைவாக கொண்டு வர வேண்டும் என மாவட்ட பயணிகள் நலச்சங்கம், வர்த்தக தொழில் சங்கங்கள், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இன்று (ஜூலை-19) தொடங்குகிறது.

மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரியான எல்.முருகன் கலந்து கொண்டு புதிய ரெயில் சேவையை பச்சை கொடியை அசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த ரெயில் சேவையானது வாரத்தின் இரண்டு நாட்களான வியாழன் மற்றும் சனிக்கிழமை இரவு 10.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும். அதே போல, மேட்டுப்பாளையத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும் என தெரிவித்துள்ளனர்.

அதே போல இந்த ரயில் சேவை கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை ஆகிய முக்கிய ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும் என தெரிவித்துள்ளனர். இதனால், தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளதால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்