தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!
கஜா புயல் காரணமாக அதிகமான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நள்ளிரவில் கனமழை பெய்தது. இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி அவர்கள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.