பச்சை மண்டல வாய்ப்பை இழக்கும் தூத்துக்குடி.!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 நாள்களாக கொரோனா உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் இன்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 508 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,058 ஆக உள்ளது. மேலும் 1485 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பாக சென்னையில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. நேற்று மட்டுமே 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் 2,008 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்களில் 70 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மீதம் இருந்த 26 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், தூத்துக்குடியில்கடந்த 18-ம் தேதிக்குப்பிறகு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருந்த நிலையில், இன்று ஆண் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 நாள்களாக கொரோனா உறுதி செய்யப்படாமல் இருந்தது. இன்னும் 4 நாள்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் தூத்துக்குடி பச்சை மண்டலமாக மாறி இருந்திருக்கும். ஆனால் இன்று 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?
February 25, 2025
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025