தூத்துக்குடியில் 12 இடங்களில் தீங்கு விளைவிக்கும் உலோகம் உள்ளது – கனிமொழி!

தூத்துக்குடியில் 12 இடங்களில் தீங்கு விளைவிக்கும் உலோகம் உள்ளது இன்று தூத்துக்குடி வரும் முதல்வர் இது குறித்து ஆலோசிப்பாரா என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று கன்னியாகுமரியில் நடத்திய ஆய்வினை தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் இன்று தூத்துக்குடி வருகிறார். இந்நிலையில் முதல்வருக்கு திமுக மக்களவை எம்.பி கனிமொழி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தூத்துகுடியிலுள்ள 12 இடங்களில் மனிதன் மற்றும் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் உலோகங்கங்கள் இருப்பதாக மாசு கட்டுப்பட்டு வாரியம் நடத்திய சோதனையில் கூறப்பட்டது. இன்று தூத்துக்குடி செல்லும் முதல்வர் வல்லுனர்களுடன் ஆயோசித்து அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நிலத்தடி நீர் மற்றும் பூமியை மாசுபடுத்தக்கூடிய தொழில்சாலைகளுக்கு அனுமதி தருவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
தூத்துக்குடி மாவட்டத்தில், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய சோதனைகளில், 12 இடங்களில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அபாயகரமான உலோகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழக அரசு, இப்பகுதிகளை சீர்செய்ய, வல்லுனர்களோடு ஆலோசித்து… 1/2
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 11, 2020
விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிலத்தடி நீர் மற்றும் பூமியை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி தருவதை தவிர்க்க வேண்டும். 2/2
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 11, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024