தூத்துக்குடி துப்பாக்கிசூடு : ஊடகங்களிடம் அப்பாவி போல நடித்து வந்த ஈபிஎஸ் – கே.பாலகிருஷ்ணன்

Default Image

தூத்துக்குடி துப்பாக்கிசூடு விவகாரத்தில், அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான், அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். 

தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று இறுதிநாள் கூட்டம் நடைபெறவுள்ளது. நேற்றைய கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடி, ஸ்டெர்லைட் போராட்டத்திக் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகள் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது.

அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான், அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இதுவரையிலும் ஏதோ அப்பாவி போல ஊடகங்களிடம் நடித்து வந்தார். இப்போதும், துப்பாக்கிச் சூட்டின் கொடூரம் தொடர்பாக கள்ள மெளனம் சாதிப்பதுடன், சபாநாயகரை கண்டித்து உண்ணாவிரதம் என்ற பெயரால் திசைதிருப்பும் நோக்கத்துடன் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பெரும் தவறு குறித்த எந்தவித குற்ற உணர்வும் இல்லாத இந்த போக்கு கிரிமினல் தனமான ஒன்று. தமிழ் நாட்டு மக்கள் இதனை மன்னிக்கவே மாட்டார்கள்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்