தூத்துக்குடியில் கல்லூரி மாணவன் கொடூரமாக வெட்டிக்கொலை!
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள கல்லூரியில் அபிமணி எனும் மாணவன் படித்து வந்துள்ளார். இவர் இன்று மதியம் சாப்பிட தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளர். அவர் செல்லும் வழியில் எதிரே வந்த கொலைகார கும்பல் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் அபிமணியை இடமறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொல்லப்பட்டார்.
இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்திவிட்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டது. தகவலறிந்து வந்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி, கொலைகாரர்களை தேடி வருகின்றனர். மேலும் இது சாதிரீதியிலான கொலை இல்லை. பழிவாங்கும் நோக்கில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என தூத்துக்குடி மாவட்ட எஸ்,பி தெரிவித்தார்.