தூத்துக்குடி அமமுக அமைப்புச் செயலாளர் ஹென்றி தாமஸ், அதிமுகவில் இணைந்தார்!

தூத்துக்குடி அமமுக அமைப்புச் செயலாளர் ஹென்றி தாமஸ் எடப்பாடி, ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
தூத்துக்குடியின் முன்னாள் நகர் மன்ற தலைவர் ஹென்றி தாமஸ். இவர் டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் அமைப்பு செயலாளர் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், அவர் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்படி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இவர் ஏற்கனவே அதிமுகவில் மாவட்ட செயலாளராக இருந்தவர், தூத்துக்குடி நகராட்சி மேயராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.,யுமான கடம்பூர் ராஜு, தெற்கு மாவட்ட செயலாளர் “எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னாள் மேயர் ஏ.பி.ஆர். அந்தோணி கிரேசியும் அதிமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025