தூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடல்!
புரேவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை தூத்துக்குடி விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட புயலான புரேவி, நேற்று திரிகோணமலை பகுதியில் கரையை கடந்துள்ள நிலையில், இன்று இரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன் – குமரி இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக புயல் பாதிக்கும் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், புரேவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை தூத்துக்குடி விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை, பெங்களூர் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.