அந்த காலத்தில் இந்து மதம் இல்லை.! வெற்றிமாறன் கூறியது சரியே.! – திருமாவளவன் கருத்து.!
1000 வருடத்திற்கு முன்னர் சைவம் , வைணவம் தான் இருந்தது. ராஜராஜ சோழன் மீது தற்காலத்து இந்து அடையாளத்தை திணிப்பது சரியில்லை என விசிக கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ராஜராஜ சோழனை கூட இந்துவாக மாற்றிவிட்டனர். அவர் சைவ மதத்தை சேர்ந்தவர் அந்த காலத்தில் இந்து மதம் ஒன்று கிடையாது என்பது போல தனது கருத்தை பதிவிட்டார். இந்த கருத்து விவாத பொருளாக மாறியது. இந்து அமைப்பினர் இந்த கருத்துக்கு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவிக்கையில், ‘ ராஜராஜ சோழன் காலத்தில் திருநீறு பட்டை அணிபவர் சைவமாகவும், திருமால் நாமம் அணிபவர்கள் வைணவர்களாகவும் வெளிப்படையாகவே தங்கள் மோதினர்.
1000 வருடங்களுக்கு முன்னர் இந்து மதம் ஒன்று கிடையாது. ராஜராஜ சோழன் சிவலிங்கத்திற்காக பெருங்கோவில் காட்டினார் என்பதற்காக அவர் மீது தற்போதுள்ள இந்து அடையாளத்தை திணிப்பது சரியில்லை.’ என இயக்குனர் வெற்றிமாறன் கூறிய கருத்துக்களுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை.. (1/2) pic.twitter.com/cWQkPBdqq2
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 4, 2022