ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது.! திருமாவளவன் கடும் விமர்சனம்.!
பாபர் மசூதி இடிப்புக்கு அம்பேத்கார் நினைவு நாளை தேர்வு செய்தது போல, தமிழக RSS அமைப்பு ஊர்வலத்திற்கு காந்தி பிறந்தநாளை தேர்வு செய்துள்ளனர். – விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டிருந்தார்.
வரும் அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உள்ளனர். இந்த ஊரவலத்திற்கு அனுமதி கொடுத்ததை திரும்ப பெறுமாறு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்
இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் RSS ஊர்வலம் தொடர்பாக பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
அதில், ‘ மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றவர்கள் RSS அமைப்பினர் என்பது ஊரறிந்த உண்மை. காந்தியை சுற்றுக்கொன்ற நாதுராம் கோட்சே, அவரது அண்ணன் கோபால் கோட்ஷே ஆகியோர் தான் கைது செய்து பட்டது உலகமறிந்த உண்மை. இப்படி இருக்க RSS ஊர்வலத்திற்கு காந்தியின் பிறந்தநாளை ஏன் இவர்கள் தேர்வு செய்துள்ளார்கள்.
இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. பாபர் மசூதி இடிப்புக்கு அம்பேத்கார் நினைவு நாளை தேர்வு செய்தது போல, தமிழக RSS அமைப்பு ஊர்வலத்திற்கு காந்தி பிறந்தநாளை தேர்வு செய்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்க முயல்கிறார்கள்.
சமுக நல்லினக்கம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. பாபர் மசூதி இடிப்பின்போது அமைதியாக இருந்ததுதமிழகம்.
இப்போது திட்டமிட்டு வன்முறை தூண்ட முயல்கிறார்கள்.’ என குற்றம் சாட்டினார் தொல் திருமாவளவன்.
மேலும், ‘ விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய காங்கிரஸ் கட்சி இணைந்து சமூக நல்லிணக்கத்தை முன்னிறுத்தி, மனித சங்கிலி பேரணி நடத்த உள்ளோம். ‘ எனவும் தெரிவித்தார் தொல்.திருமாவளவன்.