திருமாவளவன் வங்கிக் கணக்கில் ’ஜீரோ’ பேலன்ஸ்! சொத்து விபரம்

Thirumavalavan: சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் 20ஆம் தேதி ஆரம்பித்து நேற்று வரை நடந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை முடிந்தது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக இரண்டு இடங்களில் போட்டியிடுகிறது. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறார்.
அவர் தனது வேட்புமனுவை சமர்பித்துள்ள நிலையில் பிரமாணப் பத்திரத்தில் அவரின் சொத்துக்கள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, திருமாவளவன் தனது கையிருப்பில் 10,000 ரூபாய் பணம் ரொக்கமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனக்கு நான்கு வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும் அண்ணா சாலையிலுள்ள இந்தியன் வங்கி கிளையில் உள்ள கணக்கில் இருப்பு பணம் எதுவுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை அசோக் நகர் யூனியன் வங்கி கிளையில் 13,947 ரூபாய் இருப்பு உள்ளதாகவும், டெல்லியில் உள்ள ஸ்டேட் வங்கியில் 3,22,595 ரூபாய் இருப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அரியலூரிலுள்ள இந்தியன் வங்கிக் கணக்கில் 10 லட்சம் ரூபாய் தேர்தல் செலவுகளுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மியூச்சுவல் பண்ட், இன்ஸூரன்ஸ் என அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு 2,07,97,903 ரூபாயாக உள்ளது, அசையா சொத்துக்களின் (பூர்வீகம்) மொத்த மதிப்பு 28,62, 500 ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்