கொரோனா சிகிச்சை பெற்றுவந்த தொல்.திருமாவளவனின் மூத்த சகோதரி இன்று உயிரிழந்தார்.!

கொரோனா சிகிச்சை பெற்று வந்த விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் சகோதரி கு.பானுமதி இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் மூத்த சகோதரியான கு.பானுமதி இன்று உயிரிழந்தார். அவருக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. அவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்கு இளையராஜா, மாலதி, இசையமுதன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
அவரின் இறப்புக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு, டிடிவி.தினகரன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025