சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் இந்த வருடம் காந்தி சிலை முன்பு குடியரசு தின அணிவகுப்பு நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கம் போல இந்த வருட குடியரசு தினவிழாவுக்கும் தமிழக அரசு முன்னேற்பாடுகளை தற்போதே தொடங்கி விறுவிறுப்பாக செய்லபடுத்தி வருகிறது. ஆனால் அதில் மிக பெரிய மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது.
ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில், டிஜிபி அலுவலகத்திற்கு அருகே காந்தி சிலை முன்பு குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெற்று கவர்னர் தேசிய கொடி ஏற்றிவைப்பார். ஆனால், இந்தாண்டு அப்பகுதியில் மெட்ரோ ரயில் சேவை பணிகளுக்கான கட்டுமான வேலைகள் நடைபெற்று வருவதால் அங்கு நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மெரினா கடற்கரையில், விவேகானந்தர் இல்லம் அல்லது உழைப்பாளர் சிலை அருகே இந்த அணிவகுப்பு நடைபெற உள்ளதா என அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். மேலும், இந்தாண்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இருக்கிறதா என்கிற விவரமும் இன்னும் வெளிவரவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…