#Breaking : நாளை 2023இன் முதல் ஜல்லிக்கட்டு போட்டி.! வெளியான சூப்பர் அறிவிப்பு.!
தமிழகத்தில் இந்தாண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை நடைபெற உள்ளது.
பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதன் படி தற்போது 2023ன் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நாளை தமிழகத்தில் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. வருடாவருடம் புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும் இந்த ஊர் ஜல்லிக்கட்டு போட்டி இந்த வருடம் அனுமதி தாமதமானதால் நாளை நடைபெற உள்ளது.
இதில், 200 ஜல்லிக்கட்டு மாடுகள் பங்கேற்க உள்ளது. 250 மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர் என தகவல் வெளியாகியுளளது. இந்த விழா ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முருகேசன் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.