இதுதான் அரசின் ‘கடைசி’ பட்ஜெட் கூட்டத்தொடர் – முக ஸ்டாலின்
இதுதான் அரசின் ‘கடைசி’ பட்ஜெட் கூட்டத்தொடர் என்று ஆளுநர் கூறியதுதான் எனக்கு மிகவும் பிடித்தது ஒன்று என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய முக ஸ்டாலின், ஆளுநர் பேசியதில் எங்களுக்கு பிடித்தது என்னவென்றால், உட்காருங்கள் இந்த அரசாங்கத்தின் இதுதான் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் என்று தெரிவித்தார். இதுதான் உண்மை என்று நான் நினைத்தேன்.
கூட்டத்தை புறக்கணிதத்துக்கு காரணம், கடந்த டிசம்பர் மாதம் ஆளுநரை சந்தித்து அதிமுக அரசின் மீது ஆதாரத்துடன் ஊழல் புகார் அளித்திருந்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுநர் ஊழலுக்கு துணை நிற்கும் வகையில் இருந்து கொண்டிருக்கிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, அதையும் கண்டித்து ஆளுநர் உரையை மட்டுமல்ல, கூட்டத்தொடர் முழுவதும் புறக்கணிப்பு செய்வதென்று முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்திருந்தார்.